ஐ.பி.எல். 2022: இன்றும் இரண்டு லீக் போட்டிகள்.. மோதப்போகும் அணிகளின் பலம், பலவீனம் என்ன?.. ஓர் அலசல்!
ஐ.பி.எல். 2022: இன்றும் இரண்டு லீக் போட்டிகள்.. மோதப்போகும் அணிகளின் பலம், பலவீனம் என்ன?.. ஓர் அலசல்! ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு சுவாரஷ்யங்களையும், அதிர்ச்சிகளையும் கட்டவழித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டு லீக் போட்டிகள் களைகட்ட உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் மாலை 3.30 மணிக்கு மும்பை Brabourne மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தனது முன்னாள் அணியான டெல்லிக்கு எதிராக ஷ்ரேயஸ் களமிறங்குவது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணியை பொருத்தவரை நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியை பதிவு செய்து அதிக ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் இதற்கு முன் இதே மைதானத்தில் கொல்கத்தா இரண்டு முறை விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது எனவே சுதாரிப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. பேட்டிங்கில் அசுர பலத்தில் கொல்கத்தா...