திருமண நாளில் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு அன்னதானம்; அசத்தும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி947952203
திருமண நாளில் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு அன்னதானம்; அசத்தும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் இன்று (9.6.2022) மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு இருவரது சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளது. திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் தொலைபேசி எடுத்து வர கூடாது என்றும் அப்படி எடுத்து வந்தால் அதை பயன்படுத்தி எந்த விதமான புகைப்படமும் எடுக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கான மொத்த ஒளிபரப்பு உரிமையையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் திருமணம் ப...