ஐ.பி.எல். 2022: இன்றும் இரண்டு லீக் போட்டிகள்.. மோதப்போகும் அணிகளின் பலம், பலவீனம் என்ன?.. ஓர் அலசல்!
ஐ.பி.எல். 2022: இன்றும் இரண்டு லீக் போட்டிகள்.. மோதப்போகும் அணிகளின் பலம், பலவீனம் என்ன?.. ஓர் அலசல்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு சுவாரஷ்யங்களையும், அதிர்ச்சிகளையும் கட்டவழித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டு லீக் போட்டிகள் களைகட்ட உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்
மாலை 3.30 மணிக்கு மும்பை Brabourne மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தனது முன்னாள் அணியான டெல்லிக்கு எதிராக ஷ்ரேயஸ் களமிறங்குவது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அணியை பொருத்தவரை நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியை பதிவு செய்து அதிக ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் இதற்கு முன் இதே மைதானத்தில் கொல்கத்தா இரண்டு முறை விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது எனவே சுதாரிப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
பேட்டிங்கில் அசுர பலத்தில் கொல்கத்தா
பேட்டிங்கில் கொல்கத்தா அசுர பலத்தில் இருக்கிறது பேட் கம்மின்ஸ் வருகை அந்த அணியின் பேட்டிங் பலத்தை மேலும் அதிகரித்திருக்கிறது மிடில் ஆர்டரில் ரஸல் மற்றும் கம்மின்ஸ் எதிரணியை மிரட்டுகின்றனர்.
அதே போல் பந்துவீச்சிலும் இவர்களை பார்த்து பயப்பிடாதவர்கள் இல்லை. ரஹானே மட்டும் சொதப்புகிறார் அவரும் ஃபார்முக்கு திரும்பினால் கொல்கத்தாவை வீழ்த்துவது கடினமே. வருண் சக்கரவர்த்தி ரன்களை கட்டுப்படுத்துவதுடன் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு கைகொடுப்பது வெற்றியை அழைத்துவருகிறது. உமேஷ் யாதவ் ஃபார்மில் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பே...
டெல்லி அணியை பொருத்தவரை ரிஷப் பந்து எழுச்சி பெற்றால் மட்டுமே அணி எழுச்சு பெறும். ரிஷப் ஒரு இமால இன்னிங்ஸ் ஆடி மற்ற வீரர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ரிஷப் சுழலுக்கு எதிராக சுதாரிப்பது அவசியம். ஓபனிங் பார்ட்னஷிப்பான பிரித்வி ஷா மற்றும் வார்னர் வாணவேடிக்கை காண்பிக்க வேண்டியது அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தும். அக்ஷர் படேல் - குல்தீப் யாதவ் கூட்டணி அசத்தி வருகின்றனர். இவர்களை சமாளிப்பது கடினமே.
இரு அணிகளும் இதற்கு முன் 28 போட்டிகளில் மோதியதில், 16 போட்டிகளில் கொல்கத்தாவும், 12 போட்டிகளில் டெல்லி அணியின் வெற்றியை வசப்படுத்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்
நடப்பாண்டு 20 வது லீக் ஆட்டம் மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மொதும் இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் - கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் அணியும் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மோதுகிறது.
ராஜஸ்தான் அணி மூன்றில் விளையாடி இரண்டு வெற்றியை வசப்படுத்தியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வா - க்கு அதில் படிக்கல் ஓபனிங் களமிறக்கப்படவுள்ளார். பவர்பிளேயில் அஸ்வின் மற்றும் சஹலை பந்துவீசவைத்து டி- காக் மற்றும் ராகுலின் விக்கெட்டை வீழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பட்லர் அதிரடி இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம் இதன் மூலம் ஆரஞ்ச் கேப்பையும் தக்கவைக்க முடியும். வேகப் பந்துவீச்சில் போல்ட், பிரஷித், நீசம், சைனி என எதிரணியை மிரட்டுகிறது ராஜஸ்தான்.
லக்னோ அணியை பொருத்தவரை விளையாடி இரண்டில் வெற்றியை ருசித்துள்ளது. மூன்று போட்டிகளிலும் 150 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளது பேட்டிங் பலத்தை எடுத்துரைக்கிறது. இதற்கு முன் சாம்சனை இரண்டு முறை வெளியேற்றிய ஹோல்டரை வைத்தே இம்முறையும் பயமுறுத்தவுள்ளனர். பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள லக்னோ வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment