தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு..
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து சவரன் ஒரு சவரன் 40,376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் , தங்கம் விலையும் போட்டி போட்டு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பலரும் பங்குச் சந்தைகளில் இருந்து விலகி , தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம் விலை உயர இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு மார்ச் மாதத்தில் தங்கம் விலை படிப்படியாக குறைந்து ஒரு சவரன் சுமார் 36,000 மதிப்பில் விற்பனையாகி வந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை மீண்டும் உச்சமடைந்தது. கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கம் மீண்டும் 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது. அதனைத்தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து