Posts

Showing posts with the label # | #Bull | #A | #Reg

தமிழகத்தில் ரேஷன் கடைகளை ஒரே வடிவில் அமைக்க அரசு முடிவு!623209473

Image
தமிழகத்தில் ரேஷன் கடைகளை ஒரே வடிவில் அமைக்க அரசு முடிவு! தமிழகத்தில் ரேஷன் கடைகளை ஒரே வடிவில் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் அரசு வழங்கி வருகிறது. 2.15 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ளனர். இந்த ரேஷன் கடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் காணப்படுகின்றன. பல ஊர்களில் வாடகை கட்டிடங்களில் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அட்டைதாரர்களுக்கு ஒருங்கிணைந்த வசதிகள் கிடைப்பதில்லை. பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், வெயிலில் வரிசையில் மக்கள் நிற்க வேண்டியதுள்ளது. புதிய தோற்றம் தற்போது ரேஷன் கடைகளை நவீனப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு இணையதள சேவை வசதிகளை ஏற்படுத்த தகவல் தொழில்நுட்பவியல் துறை திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை கட்டும் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட சில கட்டிடங்களுக்கான முகப்பு வடிவத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த வகையில் த...