ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு?1118796954
ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு? தமிழகத்தில் கொரோனா மேலும் அதிகரித்தால் அதிமுக பொதுக்குழுவை ஆன்லைன் முறையில் நடத்த பரிசீலனை செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,தமிழகத்தில் மேலும் கொரோனா அதிகரித்தால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஒரு மாற்று திட்டத்தை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்துள்ளதாகவும்,இது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக,கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக பொதுக்குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் ...