Posts

Showing posts with the label #Crime #murder

தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

Image
தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்! திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது 15 வயது மகன் கிருஷ்ணன், அந்தபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் ராமலிங்கம் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ராமலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. கடந்த மார்ச் 21 ம் தேதி இருசக்கர வாகனத்தை கேட்கச் சென்ற ராமலிங்கத்தின் மகனை வெள்ளையம்மாள் உடன் இருந்த அவரது ஆண் நண்பர் பச்சமுத்து என்பவர் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் கிருஷ்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே பச்சமுத்துவை கைது செய்தனர். ஆனால் இதுவரை வெள்ளையம்மாள் கைது செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் சம்மந்தப்பட்ட பெண் குற்ற...