தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு..


தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு..


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து சவரன் ஒரு சவரன் 40,376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

 ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக சர்வதேச சந்தையில்  நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் , தங்கம் விலையும் போட்டி போட்டு அதிகரித்து வருகிறது.  உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பலரும் பங்குச் சந்தைகளில் இருந்து விலகி , தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம் விலை உயர இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.  கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பிறகு மார்ச் மாதத்தில் தங்கம் விலை படிப்படியாக குறைந்து  ஒரு சவரன் சுமார்  36,000  மதிப்பில் விற்பனையாகி வந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை மீண்டும் உச்சமடைந்தது. கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கம் மீண்டும் 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது.  அதனைத்தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. அந்தவகையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

சென்னையில்  இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து  ஒரு சவரன் ரூ.40,376 க்கு விற்பனையாகிறது. அதேபோல்   ஒரு கிராம் ரூ.33 உயர்ந்து  .5,047 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தக்த்தில்  வெள்ளி விலையும்  ஏற்றம் கண்டு ஒரு கிராம்  75 ரூபாய்  20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி  விலை ரூ.75,200 ஆகும்.   வாரத்தின் முதல் நாளே  தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை  ஏற்றம் கண்டிருப்பது நகை பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Comments

Popular posts from this blog