தமிழகத்தில் 3 நாட்களுக்கு தக்காளி, தேங்காய் இலவசம்!! முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்!!!540194522


தமிழகத்தில் 3 நாட்களுக்கு தக்காளி, தேங்காய் இலவசம்!! முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்!!!


 

1999-ல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, விவசாயிகள் இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை தொடங்கப்பட்டது. அவரது ஆட்சி காலத்தில் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு இத்திட்டத்தில் தோய்வு ஏற்பட்டபோதும், மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டபோது மேலும் பல இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. தற்சமயம் தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.

 

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் திண்டுக்கல் சாலையில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தை, தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 7-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் வியாபாரிகள் சாலையோரங்களில் கடை அமைப்பதை தடுக்கும் வகையில், அவர்களுக்கும் உழவர் சந்தை வளாகத்திலேயே கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் உழவர் சந்தைக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் நேற்று ரூ.200-க்கு காய்கறிகள் வாங்கியவர்களுக்கு 1 கிலோ தக்காளி, 1 தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டது. தக்காளியை உதவி வேளாண்மை அலுவலர் காந்தி, தேங்காயை தொழிலதிபர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.இதேபோல் இன்று (ஜூலை 13) முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரூ.200-க்கு காய்கறிகள் வாங்குவோருக்கு 1 கிலோ தக்காளி, 1 தேங்காய் இலவசமாக வழங்குவதாக திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

The Best Luxury Brands to Shop on Amazon Because Convenience and Quality Aren rsquo t Mutually Exclusive #Luxury