ஜூலை 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? எந்த எந்த நாட்கள் விடுமுறை முழு விவரம் உள்ளே 665397123
ஜூலை 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? எந்த எந்த நாட்கள் விடுமுறை முழு விவரம் உள்ளே
ஜூலை மாதத்தில் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரிசர்வ் வங்கி தயாரித்த நாட்காட்டியின் படி ஜூலையில் புதிய வங்கி விடுமுறைகள் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாட்களைத் தவிர, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் திருவிழாக்களை பொறுத்து மாநிலங்களில் வங்கிகளின் விடுமுறைகள் செயல்படுத்தப்படும் .
அதன்படி சில கிளைகளில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு கிளைகள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் தேசிய விடுமுறை நாட்களில் அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலின் படி ஜூலை மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடும்.
ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களில் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும். வங்கி பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
ஜூலை 1 – வெள்ளிக்கிழமை-ரத யாத்திரை- ஒடிசா
ஜூலை 3 -ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 5 – செவ்வாய் கிழமை– குரு ஹர்கோவிந்த் பிறந்தநாள் – ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜூலை 6 – புதன் கிழமை – MHIP நாள் – மிசோரம்
ஜூலை 7 -வியாழக் கிழமை- கர்ச்சி பூஜை-திரிபுரா
ஜூலை 9 – சனிக்கிழமை-ஈத்-உல்-அதா-அனைத்து மாநிலங்களும்
ஜூலை 10-ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 11 – திங்கட் கிழமை-ஈத்-உல்-அசா-அனைத்து மாநிலங்களும்
ஜூலை 13 – புதன் கிழமை-தியாகிகள் தினம்-ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜூலை 13 – புதன் கிழமை-பானு ஜெயந்தி-சிக்கிம்
ஜூலை 14 – வியாழக் கிழமை-பென் டீன் கலாம்-மேகாலயா
ஜூலை16 – சனிகிழமை-ஹரேலா-உத்தரகாண்ட்
ஜூலை 17– ஞாயிற்று கிழமை-யு டிரோட் சிங் டே-மேகாலயா
ஜூலை 24-ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 26 – செவ்வாய் கிழமை-கேர் பூஜை-திரிபுரா
ஜூலை 31 – ஞாயிற்று கிழமை – ஹரியாலி தீஜ் – ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட்
ஜூலை 31 – ஞாயிற்று கிழமை – ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினம் – பஞ்சாப் மற்றும் ஹரியானா
ஜூலை மாதத்தில் ஏதாவது முக்கியமான வங்கி பணிகள் இருந்தால் உடனே சம்பந்தப்பட்ட கிளை மேலாளரை தொடர்பு கொண்டு வங்கி இயங்கும் நாளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது முன்னதாகவே வங்கி வேலைகளை முடிக்க திட்டமிட்டுக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment