அரியலூர்: காதலிக்க மறுத்த சிறுமி பாலியல் வன்கொடுமை... இளைஞருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை
அரியலூர்: காதலிக்க மறுத்த சிறுமி பாலியல் வன்கொடுமை... இளைஞருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர் தனியார் பேருந்து டிரைவர். 17 வயது சிறுமி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரின் பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, ராஜதுரை அச்சிறுமியை காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அதனை மறுத்திருக்கிறார் அச்சிறுமி. தன்னை வெறுத்த காரணத்திற்காக ஆத்திரத்தில் ராஜதுரை அந்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி தனது பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அதனை கேட்டதும், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புகாரின் பேரில் போலீஸார் சித்துடையார் கிராமத்திற்குச் சென்று ராஜதுரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் உண்மை எனத் தெரிய வந்ததை அடுத்து ராஜதுரை மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ராஜதுரைக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
Comments
Post a Comment