முதன்முறையாக ட்ரோன் மூலம் பார்சல் அனுப்பிய இந்திய அஞ்சல் துறை!!170788121
முதன்முறையாக ட்ரோன் மூலம் பார்சல் அனுப்பிய இந்திய அஞ்சல் துறை!!
மன்னர் ஆட்சிக்காலத்தில் புறா மூலமாக கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் அந்தச் சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது இந்திய அஞ்சல் துறை.
இந்திய அஞ்சல் துறை முதன்முறையாக ட்ரோன் மூலம் பார்சல் ஒன்றை விநியோகம் செய்து சாதனை படைத்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹபே என்ற கிராமத்தில் இருந்து நெர் என்ற கிராமத்திற்கு ட்ரோன் மூலம் மருத்துவம் சார்ந்த பார்சல் அனுப்பப்பட்டதாகவும், அது 25 நிமிடத்தில் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் ட்ரோன்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என்று இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment