முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு..!
முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு..!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்;- தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி பயணம் செய்யலாம் என கூறியவர் கருணாநிதி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை முதலமைச்சராகவும், ஒருமுறை சட்ட மன்ற மேலவை உறுப்பினராகவும், அறுபது ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் மகளிருக்கும் சொத்துகளில் உரிமை, உழவர்களுக்கு இலவச மின்சாரம், அனைத்து சாதியினரும் அரச்சகர் உள்ளிட்ட திட்டங்களை கருணாநிதி கொண்டுவந்தார். கைம்பெண் மறுமண நிதி உதவி, மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெரியார் சமத்துவப்புரம் ததிட்டம் தந்தவர். வி.சிங், குஜ்ரால், வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரதமர்களால் கலைஞர் கருணாநிதி பாராட்டப்பட்டவர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவருக்குகருணாநிதி சிலை நிறுவப்படும் என தெரிவித்தார்.
Comments
Post a Comment