துணைவேந்தர்களை நியமிக்கும் சட்டமுன்வடிவு குஜராத் போல தமிழகத்திலும் மாநிலஅரசே நியமிக்கும் அதிகாரம் ேவண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவின்மீது, பேசியதாவது: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றினுடைய வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் செயல்படக்கூடிய நேரத்தில், கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய அரசுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மாநில அரசின், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலந்தாலோசித்து ஆளுநர் துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்து வந்துள்ள நிலையில், அண்மைக் காலமாக இந்த நிலையிலே மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment