ஐஸ்வர்யா தோழியா? தனுஷ் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை


ஐஸ்வர்யா தோழியா? தனுஷ் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை


கணவன், மனைவியான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் தம்பதி தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அண்மையில் பிரிவதாக டிவிட்டரில் அறிவித்தனர். சினிமா துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், இன்னும் ஓய்ந்தபாடில்லை. தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரியவில்லை எனக் கூறினார். ஐஸ்வர்யாவும் டிவிட்டரில் இருக்கும் ஐடியில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை இதுவரை மாற்றவில்லை. இதனால், இருவரும் எப்போது வேண்டுமானாலும் சேருவார்கள் என்ற நம்பிக்கை பொதுவெளியில் உள்ளது.

மேலும் படிக்க | பச்சை குத்திய ரசிகருக்கு ஷாக் கொடுத்த சன்னிலியோன்.!

பிரிவு அறிவிப்புக்குப் பிறகு தனுஷ் பட வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்த தொடங்கினார். அவருடைய மாறன் திரைப்படம் அண்மையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. ஐஸ்வர்யா தனுஷ், தன்னுடைய விருப்பமான இயக்குநர் பணிக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பினார். பயணி என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ள அவர், இன்று அதனை வெளியிட்டார். தமிழில் அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய பிரபலங்களான அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பத்தை அந்தந்த மொழிகளில் ரிலீஸ் செய்துள்ளனர். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷூம் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பத்தை பகிர்ந்துள்ளார். அதில் ‘தோழி’ ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் வெற்றியடைய வாழ்த்துகள் என கூறி ஆல்பத்தை பகிர்ந்துள்ளார். இதுதான் இப்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ளது. மனைவியான ஐஸ்வர்யாவை, நண்பர் என குறிப்பிடுவதா? என நெட்டிசன்கள் வினவியுள்ளனர். 

அதேநேரத்தில், பயணி ஆல்பத்தில் ஒரு காட்சியில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டர் இடம்பெற்றுள்ளது. கணவர் படத்தின் தமிழ் போஸ்டரை வைக்காமல், தெலுங்கு போஸ்டரை ஐஸ்வர்யா வைத்தது ஏன்? என்றும் சிலர் வினவியுள்ளனர். 

மேலும் படிக்க |  ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ஆண்ட்ரியா – மிரட்டல் லுக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

The Best Luxury Brands to Shop on Amazon Because Convenience and Quality Aren rsquo t Mutually Exclusive #Luxury