முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு?


முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு?


கடந்த மார்ச் 15 அன்று பிஎஸ்இ-யில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 251.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இது நேற்று 260.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த இரு அமர்வில் மட்டும் இது 8.72 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது. இது இந்த இரு அமர்வுகளில் சென்செஸ் 2,086 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 623 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்ட நிலையில், அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே கடந்த 8 அமர்வுகளாக பார்க்கும்போது முதலீட்டாளர்கள் 19 லட்சம் கோடி ரூபாயினை பெற்றுள்ளனர். இது மார்ச் 7 நிலவரப்படி 241 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, நேற்று 260 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

எனினும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது சென்செக்ஸ் 0.67% அல்லது 389 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி 0.39% அல்லது 67 புள்ளிகளை இழந்தும் காணப்படுகின்றது. எனினும் ஒரு ஆண்டில் சென்செக்ஸ் 16.19% அல்லது 8062 புள்ளிகள் அதிகரித்தும், இதே நிஃப்டி 17.43% அல்லது 2565 புள்ளிகள் அதிகரித்தும் காணப்படுகின்றது.

ஏற்றம் கண்ட துறைகள்

இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் இரண்டும் இன்னும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த வாரத்த்தில் இருந்தே வங்கி, ஆட்டோ, எஃப்.எம்.சி.ஜி, ஐடி, ரியால்டி உள்ளிட்ட துறைகள் நல்ல லாபகரமான துறைகளாக இருந்தன. குறிப்பாக மெட்டல் தவிர மற்ற அனைத்து துறைகளுமே நல்ல லாபகரமான துறைகளாக இருந்தன.

Comments

Popular posts from this blog