‛வேட்டையாடிய ராகவன்... விளையாடிய இளமாறன்... அமுதன்...’ 16 ஆண்டுகளுக்கு முன் சம்பவம் செய்த கமல்! ‛ராகவன்... மாறா... அமுதா...’ இந்த பெயர்களை ஒரு காலத்தில் டிவியில் கேட்டுக் கொண்டே இருப்போம். இப்போதும் கூட கேட்டுக் கொண்டிருக்கிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்த வேட்டையாடி விளையாடு. 2006 ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது, இத்திரைப்படம் வெளியாகி. ஏசிபி.,யாக வாழ்ந்து, செத்து, பிழைத்து வரும் ராகவன் கதாபாத்திரம்; அதன் பின் பல போலீஸ் கதாபாத்திரங்களுக்கு முன்னோடியாக இருந்ததையும் மறக்க முடியாது. கவுதமின் அக்மார்க் அடையாளங்களோடு அதே உடை, அதே நடை என எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதை அப்படியே தன் படமாக மாற்றியிருப்பார் கமல். கிரனூரில் தொடங்கி லண்டன் வரை தொடரும் ஒரு விசாரணை வளையம்; அதை பின் தொடரும் போலீஸ் அதிகாரி. அவர்களோடு பயணிக்கும் கதை என விறுவிறுப்பாக போகும் வேட்டையாடு விளையாடு, குற்றவாளிகள் வேட்டையாடப்பட்டார்களா? போலீஸ் அதிகாரி ராகவன் விளையாடினாரா என்பது தான் கதை. ஹாரீஸ் ஜெயராஜ் பீக்கில் இருந்த நேரம் அது. படத்தின் அத்தனை